இந்தியா மற்றும் ரஷிய தடையற்ற வர்த்தக உடன்படிக்கை
2023-04-17 20:29:12

இந்தியாவும் ரஷியாவும் தடையற்ற வர்த்தக உடன்படிக்கை பற்றி விவாதம் நடத்தி வருகின்றன. ரஷியா-உக்ரைன் மோதல் நிகழ்ந்த பின், இந்தியாவுக்கும் ரஷியாவுக்கும் சிறப்பாக வளர்ந்து வரும் வணிக உறவை இது மேலும் ஊக்குவிக்கும் என்று ராய்ட்டார்ஸ் 17ஆம் நாள் செய்தி வெளியிட்டது.

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் புதுதில்லியில் கூறுகையில், இந்தியாவும் ரஷியாவும் ஒரு வர்த்தக உடன்படிக்கை தொடர்பான முன்கூடிய ஒப்பந்தத்தை உருவாக்குவதாக தெரிவித்தார். ரஷிய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் மாண்டுரோவ் கூறுகையில், இது, இரு தரப்பு முதலீட்டுக்கு உத்தரவாதம் அளிக்கும் என்று தெரிவித்தார்.