போதைப்பொருள் கடத்தல் கும்பலை முறியடித்து, 62 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை!
2023-04-17 10:29:53

இலங்கை கடற்படையினர், கடந்த சனிக்கிழமை போதைப்பொருள் கடத்தல் கும்பலிடமிருந்து, 62 கிலோ கேரள கஞ்சாவை பறிமுதல்  செய்ததாக ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தின் வடக்கே டெல்ஃப்ட் தீவுக்கு மேற்கே இலங்கைக் கடற்பரப்பில், இந்திய பாய்மரக் கப்பலில் போதைப்பொருளுடன்  பயணித்த 3 சந்தேகிக்கப்பட்டவர்களைக் கைதி செய்ததாக, கடற்படையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஞ்சாவின் சில்லறை மதிப்பு 20 மில்லியன் ரூபாய் என்று கடற்படை தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்படையினர், நாட்டிற்குள் போதைப்பொருள் ஊடுருவலைத் தடுப்பதற்காக, தீவைச் சுற்றியுள்ள கரையோர மற்றும் கடற்பரப்புகளில் வழக்கமான ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.