சீனாவின் கணினி மென்பொருள் பதிப்புரிமை அதிகரிப்பு
2023-04-17 15:45:14

2022 ஆம் ஆண்டு சீனக் கணினி மென்பொருள் பதிப்புரிமை பதிவு நிலைமை அறிக்கை ஒன்றைச் சீனப் பதிப்புரிமை பாதுகாப்பு மையம் 17ஆம் நாள் வெளியிட்டது. சீனாவில், பதிப்புரிமை பாதுகாப்பு மற்றும் புதுப்பிப்பு சூழல் மேம்படுத்தப்பட்டுள்ளதோடு, கடந்த 10 ஆண்டுகாலத்தில் மென்மொருட்களின் தரம் மற்றும் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து பல தொழில்களின் வளர்ச்சிக்கு துணை புரிந்துள்ளது.

2022ஆம் ஆண்டில் சீனாவில் கணினி மென்பொருள் பதிப்புரிமை பதிவு எண்ணிக்கை 18 இலட்சத்து 35 ஆயிரமாகும். இது, 2012ஆம் ஆண்டில் இருந்ததை விட 12 மடங்கு அதிகம்.

2022ஆம் ஆண்டில் சீனாவின் செயற்கை நுண்ணறிவு, பெரிய தரவுகள் ஆகியவற்றின் மென்மொருள் பதிவு எண்ணிக்கை 35 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.