இறக்குமதி ஏற்றுமதி பொருட்காட்சியில் மொத்த ஏற்றுமதி தொகை 1.5 இலட்சம் கோடி டாலர்
2023-04-17 15:19:34

133வது சீன இறக்குமதி ஏற்றுமதி பொருட்காட்சி குவாங்ச்சோ நகரில் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. துவக்கப்பட்ட 67 ஆண்டுகளில் இப்பொருட்காட்சியில் கையாளப்பட்ட மொத்த ஏற்றுமதி தொகை, 1.5 இலட்சம் கோடி டாலர் எட்டியது.

நடப்பு பொருட்காட்சியில் கலந்து கொண்ட தொழில் நிறுவனங்களில் பாதியளவு தயாரிப்பு நிறுவனங்களாகும். அவற்றில் அரசு சாரா தொழில் நிறுவனங்கள், 90 சதவிகிதம் வகிக்கின்றன. அவை, சீனத் தயாரிப்புத் துறையின் புதிய சக்தி மற்றும் திசையைக் காண்பிக்கின்றன. இப்பொருட்காட்சியில் சுமார் 8 இலட்சம் புதிய உற்பத்திப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், புதிய பொருட்களை முதன்முறையாக அறிமுகப்படுத்த, 300 நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.