7 நாடுகள் குழுவின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்துக்கு ஜப்பான் மக்கள் எதிர்ப்பு
2023-04-17 11:20:39

ஏழு நாடுகள் குழுவின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் 16ம் நாள் ஜப்பானின் நக்கனோகன் மாகாணத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தை எதிர்க்கும் வகையில், ஜப்பான் மக்கள் பலர் அன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஏழு நாடுகள் குழுவின் பங்கு மீது சந்தேகம் தெரிவித்த மக்கள், “7 நாடுகள் குழுவுக்கு எதிர்ப்பு”,“போர் வேண்டாம்”முதலிய முழக்கங்களை எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனிடையில், உக்ரைன் நெருக்கடி, கொரிய தீபகற்ப நிலைமை, அணு ஆயுதக் குறைப்பு முதலிய முக்கியத் தலைப்புகள் சார்ந்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக ஜப்பானின் க்யோடோ நியூஸ் நிறுவனம் தெரிவித்தது.