ட்விட்டர் பயனர்கள் மீது அமெரிக்காவின் கண்காணிப்பு ஆச்சரியமல்ல
2023-04-18 18:54:50

ட்விட்டர் பயனர்கள் அனைவரின் ரகசிய தகவல்களையும் அமெரிக்க அரசு படிக்க முடியும் என்பதை ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் அண்மையில் தெரிவித்தார்.

எலோன் மஸ்கின் இக்கூற்று குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் 18ஆம் நாள் கூறுகையில், சமூக ஊடக தளங்களில் பயனர்களின் தனியுரிமைத் தரவுகளை அமெரிக்கா கண்காணித்து வரும் செயல் ஆச்சரியமல்ல. ஐரோப்பிய நாட்டுத் தலைவர்களின் தொலைபேசியை அமெரிக்கா நீண்டகாலமாக ஒட்டுக்கேட்டிருந்தது. அண்மையில் அமெரிக்க ராணுவத்தின் ரகசிய ஆவண கசிவுச் சம்பவம், அதன் கூட்டணி நாட்டுத் தலைவர்களைக் கூட அமெரிக்கா கண்காணித்து வருவதை வெளிப்படுத்தியுள்ளது என்றும் வாங் வென்பின் தெரிவித்தார்.