செளதி அரேபிய வெளியுறவு அமைச்சரின் சிரியா பயணம்
2023-04-18 18:57:28

செளதி அரேபிய வெளியுறவு அமைச்சர் பைசல் பின் ஃபார்ஹான் அல் சவுத் ஏப்ரல் 18ஆம் நாள் சிரியாவில் பயணத்தைத் தொடங்கினார். 2011ஆம் ஆண்டு சிரியா நெருக்கடிக்குப் பின், செளதி அரேபிய வெளியுறவு அமைச்சர் சிரியாவில் பயணம் மேற்கொள்வது இதுவே முதன்முறையாகும்

கடந்த 12ஆம் நாளில், சிரிய வெளியுறவு அமைச்சர் செளதி அரேபியாவில் பயணம் மேற்கொண்டு, பைசலுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, சிரியா அரபு குடும்பத்தில் மீண்டும் இணைவது உள்ளிட்டவை குறித்து அவர்கள் விவாதித்தனர்.