ஈரான் அரசுத் தலைவர்-சௌதி அரேபிய மன்னர் ஒருவருக்கு ஒருவர் அழைப்பு
2023-04-18 11:13:19

சொந்த நாட்டில் பயணம் மேற்கொள்ளும் வகையில், ஈரான் அரசுத் தலைவர் லேசியும் சௌதி அரேபிய மன்னர் சாலெமனும் ஒருவருக்கு ஒருவர் அழைப்பு விடுத்தனர் என்று ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் கணானி 17ஆம் நாள் கூறினார். அவர் கூறுகையில்,

பொருளாதாரம், வர்த்தகம், பண்பாடு, விளையாட்டு, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளிலான ஒத்துழைப்பு உடன்படிக்கைகளின் நடைமுறையாக்கத்தை இரு நாடுகள் முன்னேற்றி வருகின்றன என்றார்.

பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்ட பெயரில், சௌதி அரேபியா 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், ஷியா பிரிவைச் சேர்ந்த மதவாதி உள்பட கைதிகளுக்கு மரணத் தண்டனையை நிறைவேற்றியது. அதே ஆண்டில் இரு நாடுகள் தூதாண்மையுறவை துண்டித்தன.

சீனாவின் ஆதரவுடன், இரு நாடுகளும் இவ்வாண்டு மார்ச் மாதத்தில் தூதாண்மையுறவை மீட்பதற்கு ஒப்புகொள்வதாக அறிவித்தன.