அமெரிக்க போர்க் கப்பல் தைவான் நீரிணையைக் கடந்து செல்வதற்குச் சீனா எதிர்ப்பு
2023-04-18 09:55:05

ஏப்ரல் 17ஆம் நாள் சர்வதேசச் சட்டத்தின் கீழுள்ள "நீர் வழி சுதந்திரம்" என்ற பெயரில் ஒரு அமெரிக்க போர்க் கப்பல் தைவான் நீரிணையைக் கடந்து சென்றுள்ளதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.

இது குறித்து பேசுகையில், அமெரிக்காவின் இச்செயல், சீனாவின் இறையாண்மை சுதந்திரம் மற்றும் பாதுகாப்புக்குத் தீங்கு விளைவித்து, பிரதேசங்களின் அமைதியையும் நிதானத்தையும் சீர்குலைத்துள்ளது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் வாங் வென்பின் தெரிவித்தார். இதுபோன்ற சட்ட மீறல் மற்றும் ஆத்திரமூட்டும் செயல்களை அமெரிக்கா உடனடியாக நிறுத்துமாறு சீனா வேண்டுகோள் விடுத்துள்ளது. தைவான் நீரிணை அமைதி மற்றும் நிதானத்துக்கான பிரச்சனையாக இருக்க வேண்டாம் என்று செய்தியாளர் கூட்டத்தில் 17ஆம் நாள் வாங் வென்பின் தெரிவித்தார்.