சீனாவின் சரக்கு வர்த்தகம் 4.8 விழுக்காடு அதிகரிப்பு
2023-04-18 19:06:35

இவ்வாண்டின் முதல்  3 திங்களில், சீனாவின் சரக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதித் தொகை கடந்த ஆண்டின் இதே காலத்தை விட 4.8 விழுக்காடு அதிகரித்தது. இதில், ஏற்றுமதித் துறை 8.4 விழுக்காடு வளர்ச்சியைக் கண்டுள்ளது என்று சீனத் தேசிய புள்ளிவிவரப் பணியகத்தின் அதிகாரி 18ஆம் நாள் செவ்வாய்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

அதில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையில் இணைந்துள்ள நாடுகளுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தகம் 16.8 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேவேளையில், பிராந்திய விரிவான பொருளாதாரக் கூட்டுறவு ஒப்பந்த்தின் உறுப்பு நாடுகளுடனான  ஏற்றுமதி மற்றும் இறக்குமதி 7.3 சதவீதம் அதிகரித்துள்ளது.

பொருளாதார வளர்ச்சி மெதுவாக இருக்கும் சூழலிலும், புறஉலகில் உறுதியற்ற காரணிகள்  அதிகம் உள்ள  பின்னணிலும்,  இத்தகைய வளர்ச்சி விகிதத்தை எட்டியது எளிமையாதில்லை என்பது குறிப்பிட்டத்தக்கது.