அமெரிக்க அதிகாரிகளின் அர்ஜென்டீனா பயணத்தின் நோக்கம் என்ன?
2023-04-18 20:30:41

அமெரிக்க தெற்கு இராணுவ தலைமையகத்தின் தளபதி லாரா ஜேன் ரிச்சர்ட்சன் அர்ஜென்டீனாவின் அதிகாரியுடன் பேச்சுவார்த்தை நடத்திய போது,  லத்தீன் அமெரிக்காவில் சீனாவின் செல்வாக்கு குறித்து விவாதித்தாக அர்ஜென்டீனாவின் செய்தி ஊடகம் 17ஆம் நாள் வெளியிட்ட கட்டுரையில் விமர்சித்துள்ளது. இதற்கு முன்னதாக, அமெரிக்க துணை வெளியுறவு அமைச்சர்  வெண்டி ஷெர்மன்  அந்நாட்டில் பயணம் மேற்கொண்டபோது, அர்ஜென்டீனா, சீனாவுடனான உறவை வளர்பத்தில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று கோரினார்.

சீன-அர்ஜென்டீன உறவை வீழ்த்தும் நோக்கத்துடன், அமெரிக்காவின் உயர் அதிகாரிகள் அடுத்தடுத்து அர்ஜென்டீனாவில் பயணம் மேற்கொண்டுள்ளனர் என்று அர்ஜென்டீனாவின் செய்தித்தாளான பேஜினா12 சுட்டிக்காட்டியது. சில செய்தி ஊடகங்கள் கூறுகையில், லத்தீன் அமெரிக்க நாடுகளில் குறிப்பாக அர்ஜென்டினாவில் சீனாவின் ஒத்துழைப்புகளைக் கண்காணிக்க அமெரிக்கா எப்போதும் செயல்பட்டு வருகிறது.

அமெரிக்கா இவ்வாறு செய்வது ஏன்? அர்ஜென்டீனாவின் செய்தி ஊடகத்தின் ஆய்வின்படி, சீனாவுக்கு எதிராக முன்னாள் அரசுத் தலைவரின் கொள்கையை வலுப்படுத்த ஜோ பைடன் செயல்பட்டு வருகின்றார். ஏனென்றால், லத்தீன் அமெரிக்கா அல்லது உலகளவில் சீனா வளர்ச்சி அடைவதை அவர் விரும்பவில்லை.

2022ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு மத்தியில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையில் இணைந்த முதல் நாடு, அர்ஜென்டீனா ஆகும். இது, வளர்ந்து வரும் நாடுகளிடையே பரஸ்பர நலன் மற்றும் கூட்டு வெற்றி தரும் ஒத்துழைப்பு ஆகும். ஆனால், அமெரிக்காவின் பார்வையில், சீன-அர்ஜென்டீன ஒத்துழைப்பு, தனது நலன்களுக்கு அறைகூவலை ஏற்படுத்துவதாகவும், தனது மேலாதிக்கத்தை அச்சுறுத்துவதாகவும் உள்ளது. எனவே, அமெரிக்கா இயன்ற அளவில் இந்த ஒத்துழைப்பைச் சீர்குலைத்து வருகிறது.