பிரிட்டன் தலைமையமைச்சரின் மீது நாடாளுமன்றம் புலனாய்வு
2023-04-18 09:46:44

பிரிட்டன் நாடாளுமன்றம் 17ம் நாள் வெளியிட்ட ஓர் ஆவணத்தின்படி, அண்மையில் தலைமையமைச்சர் சுனாக்கின் மீது பிரிட்டன் நாடாளுமன்றத்தின் வரையறை விவகாரத்துக்கான ஆணையாளர் புலனாய்வு மேற்கொள்ளத் தொடங்கினார்.

இப்புலனாய்வு, நலன் தொடர்பான பிரகடனத்துடன் தொடர்புடையது. சுனாக்கின் மனைவின் அக்ஷதா மூர்த்தி, ஒரு குழந்தை காப்பக நிறுவனத்தில் பங்கு வைத்துள்ளார். அந்த குழந்தை காப்பக நிறுவனம், பிரிட்டன் அரசின் வரவு செலவு திட்டத்தின் ஒரு கொள்கையால் நலன் பெறக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.