சீனாவில் புதிய விவசாயிகள்
2023-04-19 09:48:38

லியூ ஷென்திங் என்பவர், சீனாவின் சிச்சுவான் மாநிலத்தில் பழம் பயிரிடும் விவசாயி ஒருவராவர். ஆனால் அவர் சீனாவில் ஒரு புகழ்பெற்ற பல்கலைக்கழகத்திலிருந்து முதுகலை பட்டம் பெற்றவராவார். கடந்த சில ஆண்டுகளாக, சீனாவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கிராமப்புற வளர்ச்சி என்ற திட்டத்துடன், கிராமப்புறத்தில் தொழில் புரிவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 7 ஆண்டுகளுக்கு முன் அவர் நகரிலுள்ள பணியிலிருந்து விலகி, சொந்த ஊரில் உடன்படிக்கை மூலம் 8.6 ஹெக்டர் நிலப்பரப்புடைய விளைநிலத்துக்குப் பொறுப்பேற்று, பழம் பயிரிடும் துறையில் ஈடுபடத் துவங்கினார். சீனாவில், அவர் போன்ற உயர் நிலை கல்வி பெற்ற விவசாயிகள், புதிய விவசாயிகள் என்று அழைக்கப்படுகின்றனர்.