சீன-மத்திய ஆசிய ஒத்துழைப்பின் முன்னேற்றங்கள்
2023-04-19 10:38:29

2022ம் ஆண்டில் சீனா, மத்திய ஆசிய 5 நாடுகளுடனான வர்த்தகத் தொகை 7022 கோடி டாலர் எட்டி, புதிய வரலாற்றுப் பதிவை உருவாக்கியது என்று சீன வணிகத் துறை அமைச்சர் வாங் வென் டாவ் 18ம் நாள் தெரிவித்தார்.

சீன-5 மத்திய ஆசிய  நாடுகளின் பொருளாதார வர்த்தகத் துறை அமைச்சர்களுக்கான முதலாவது கூட்டம் 18ம் நாள் காணொளி வழியாக நடைபெற்றது. அதில் வாங் வென் டாவ் கூறுகையில், மத்திய ஆசிய நாடுகளிலிருந்து சீனா இறக்குமதி செய்த வேளாண், எரியாற்றல் மற்றும் கனிம தாது பொருட்களின் மதிப்பு, கடந்த ஆண்டில் இருந்ததை விட 50 விழுக்காடு அதிகரித்தன. மத்திய ஆசிய நாடுகளுக்கு சீனா ஏற்றுமதி செய்த இயந்திர மின்சாரப் பொருட்களின் மதிப்பு, கடந்த ஆண்டில் இருந்ததை விட 42 விழுக்காடு அதிகம். 2022ம் ஆண்டு இறுதி வரை, இந்த நாடுகளில் சீனாவின் நேரடி முதலீட்டுத் தொகை, 1500 கோடி டாலர் ஆகும் என்று அறிமுகப்படுத்தினார்.