சீனாவுடனான உறவைத் துண்டிப்பது ஏற்புடையதல்ல : ஐரோப்பிய ஆணையத் தலைவர்
2023-04-19 18:53:05

சீனா, ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய வர்த்தகக் கூட்டாளியாக திகழ்கிறது. சீனாவுடனான உறவை துண்டிப்பது ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஏற்புடையதல்ல , விருப்பமானதும் அல்ல என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லியென் 18ஆம் நாள் தெரிவித்தார்.

அன்று நடைபெற்ற ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் முழு அமர்வுக் கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியம்- சீனா உறவு குறித்து விவாதித்தபோது, வான் டெர் லியென்  இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், சமீபத்திய சீனப் பயணத்தைத் தொடர்ந்து சீன மக்கள் மீதான எனது மதிப்பு உயர்ந்தது. கடந்த பல பத்தாண்டுகளில், சீனா தனது பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளதோடு, சுமார் 80 கோடி மக்கள் தொகை வறிய நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். சீனா, ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய வர்த்தகக் கூட்டாளியாகும். சீனாவுடனான உறவை உரிய முறையில் கையாள்வது, ஐரோப்பாவுக்கு மிகவும் முக்கியமானது என்று குறிப்பிட்டார்.

சீனாவுடனான உறவை கையாள்வதில் தனித்துவமான அணுகுமுறையை உருவாக்க ஐரோப்பிய ஒன்றியம் வேண்டும் என்றும் வான் டெர் லியென் வலியுறுத்தினார்.