மெக்சிகோவில் அமெரிக்காவின் உளவு செயல் பற்றி லோபஸ் குற்றஞ்சாட்டு
2023-04-19 17:34:57

மெக்சிகோவில் உள்விவகாரங்களில் தலையிடுதல் மற்றும் உளவுச் செயல்பாடுகளை அமெரிக்கா நடைமுறைப்படுத்தியதாக மெக்சிகோ அரசுத் தலைவர் ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் 17ஆம் நாள் குற்றஞ்சாட்டினார்.

அமெரிக்காவில் போதைப்பொருள் தடுப்பு அமலாக்க பிரிவு மெக்சிகோ அரசின் அங்கீகாரமின்றி உள்ளூர் போதைப்பொருள் வியாபார குழுக்குள் ஊடுருவியுள்ளது என்று லோபஸ் தெரிவித்தார்.

மேலும், மெக்சிகோவில் அமெரிக்கா நடத்திய உளவு செயல்பாடுகள் பற்றிய “வாஷிங்டன் போஸ்ட்” செய்தித்தாளின் தகவலை அவர் குறிப்பிட்டார்.

மெக்சிகோவின் பொது பாதுகாப்பை உத்தரவாதம் செய்வது மெக்சிகோ-அமெரிக்க பாதுகாப்பு விவகாரம் பற்றிய ஒத்துழைப்புக்கான முன்நிபந்தனையாகும். பிற சுதந்திரமான நாடுகளின் உள்விவகாரத்தில் தலையிடாமல் இருந்தால் மட்டுமே, இரு நாட்டு அரசு மற்றும் மக்களுக்கிடையே பரஸ்பர மரியாதை உறவை உருவாக்க முடியும் என்றும் லோபஸ் தெரிவித்தார்.