திறந்த கதவைச் சீனா ஒருபோதும் மூடாது
2023-04-19 17:36:45

சீனத் தேசியப் புள்ளிவிவரப் பணியகம் 18ஆம் நாள் வெளியிட்ட தரவின்படி, இவ்வாண்டின் முதல் காலாண்டில் சீனாவின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட, 4.5விழுக்காடு அதிகமாகும். அதன் அதிகரிப்பு வேகம் கடந்த ஆண்டின் 4ஆவது காலாண்டை விட, 1.6விழுக்காடு அதிகரித்தது. சந்தை நம்பிக்கை முனைப்புடன் மீட்சி பெறுவதை இது வெளிக்காட்டியுள்ளது.

சீனாவின் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கை என்றுமே மாறாது. திறந்த கதவைச் சீனா ஒருபோதும் மூடாது. சீனாவுடன் கூட்டு வெற்றித் தரும் ஒத்துழைப்பை மேற்கொள்ள விரும்பும் நாடுகள் அனைத்தையும் நாங்கள் வரவேற்று இந்நாடுகளுடன் இணைந்து உலகப் பொருளாதாரத்தின் கூட்டு செழுமையை முன்னேற்றப் பாடுபட விரும்புவதாக சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் சுட்டிக்காட்டியுள்ளனர் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் தெரிவித்தார்.