நம்பமுடியாத நிறுவனங்களின் பட்டியல் வெளியீடு:சீனா
2023-04-19 14:10:43

நம்பமுடியாத நிறுவனங்களின் பட்டியல் பற்றிய அறிவிப்பைச் சீன வணிக அமைச்சகம் அண்மையில் வெளியிட்டது. அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் தொழில் நிறுவனம், ரேதியோன் ஏவுகணை மற்றும் பாதுகாப்பு நிறுவனம் ஆகியவை தைவானுக்கு ஆயுதங்களை விற்பனை செய்த காரணத்தால், நம்பமுடியாத நிறுவனங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

அதன் படி, மேற்கூறிய நிறுவனங்களின் மூத்த நிர்வாகிகள் சீனாவுக்குள் நுழைய தடை செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிறுவனங்கள் சீனாவுடன் தொடர்புடைய ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மேற்கொள்ளவும் தடை செய்யப்பட்டன என்று இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.