முதல்காலண்டில் இந்தியாவின் உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை 51 விழுக்காடு உயர்வு!
2023-04-20 11:02:15

இவ்வாண்டின் முதல் காலாண்டில், இந்தியாவின்  உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை, மொத்தம் 3.75 கோடியை  எட்டியது. இது, முந்தைய ஆண்டை விட 51.7 விழுக்காடு உயர்ந்துள்ளது என்று நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் அறிக்கை காட்டுகிறது.

சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் அறிக்கையின் படி, பயணிகளின் புகார்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது மற்றும் புகார்களின் தீர்வு அதிகரித்துள்ளது. இது 2019  மார்ச் திங்களில் 1,684 இலிருந்து, 2023 மார்ச் திங்களில் 347 ஆகக் குறைந்துள்ளது. அதே நேரத்தில் புகார் தீர்வுகள், 2019 மார்ச் திங்களில் இருந்த 93.5 விழுக்காட்டுடன் ஒப்பிடும்போது, கிட்டத்தட்ட 99 விழுக்காடாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.