மக்கள் தொகையைப் பயன்படுத்தி சீனாவை மட்டுப்படுத்தும் மேலை நாடுகள்
2023-04-20 11:03:24

இவ்வாண்டில் இந்தியா, சீனாவைத் தாண்டி, உலகின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக மாறும் என்று ஐ.நா மக்கள் தொகை நிதியம் 19ம் நாள் வெளியிட்ட 2023 உலக மக்கள் தொகை நிலைமை பற்றிய அறிக்கையில் மதிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், சீன வளர்ச்சியை மட்டுப்படுத்த விரும்பும் அமெரிக்கா, சீனாவின் மாபெரும் சாதனைகளுக்குக்குரிய காரணம் தனிச்சிறப்புடைய வளர்ச்சி வழிமுறை மற்றும் பாதை மேம்பாடு ஆகும் என்பதை வேண்டுமென்றே புறக்கணித்துள்ளது. அதோடு, மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்ற தகுநிலையை சீனா இழந்துள்ளதாக மேலை நாடுகளின் ஊடகங்கள் பரப்புரை செய்து, தொடர்புடைய தொழில் நிறுவனங்கள் சீனாவிலிருந்து விலகுவதைத் தூண்டி, சீன வளர்ச்சிப் போக்கை ஒடுக்குகின்றன.

மொத்த மக்கள் தொகை முக்கியமானது. ஆனால் அதை விட திறமைசாலிகளின் எண்ணிக்கை முக்கியமானது. தற்போது சீனாவில் கிட்டத்தட்ட 90 கோடி தொழிலாளர்கள் உள்ளனர். அதன் அடிப்படையில் ஆண்டுதோறும், 1.5 கோடி தொழிலாளர்கள் அதிகரிக்கப்படுகின்றனர். எனவே வளமான திறமைசாலிகள், சீனாவின் முனைப்பான சாதகமாகும். மேலும் சீனாவில் உயர்நிலை கல்வி பெற்றவர்களின் எண்ணிக்கை, 24 கோடியைத் தாண்டியது குறிப்பிடத்தக்கது.

அதே வேளை, மூப்பு அடைதல் உள்ளிட்ட பிரச்சினைகளைச் சமாளிக்க, சீனா ஆக்கப்பூர்வமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொது மக்களின் கூட்டுச் செழுமையை முன்னெடுப்பது, சீனப் பொருளாதார மேம்பாட்டுக்கான உந்து சக்தியாக மாறும். உலகமும் அதிலிருந்து நலன்களைப் பெறும் என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தனர்.