சீன மொழித் தின நிகழ்ச்சியை நடத்திய யுனெஸ்கோ
2023-04-20 11:05:51

ஐ.நாவின் சீன மொழித் தினக் கொண்டாட்ட நிகழ்ச்சி 18ஆம் நாள் பிரான்ஸின் பாரிஸ் நகரிலுள்ள யுனெஸ்கோவின் தலைமையகத்தில் நடைபெற்றது. சீன மொழி: நாகரிகப் பரிமாற்றத்தை முன்னேற்றுவது என்பது, இவ்வாண்டின் சீன மொழித் தினத்தின் தலைப்பாகும்.

இந்நிகழ்வில், சீனக் கல்வித் துறையின் துணைத் தலைவரும், யுனெஸ்கோவின் சீனத் தேசியக் குழுவின் இயக்குநருமான சென் ஜியே காணொலி வழியாகக் கலந்து கொண்டு உரை வழங்கினார். அப்போது, ஐ.நாவின் 6 அதிகார மொழிகளில் ஒன்றான சீன மொழி, சர்வதேச ஒத்துழைப்பில் சீனா கலந்து கொள்வதற்குரிய முக்கியப் பாலமாகும் எனக் குறிப்பிட்ட அவர், இது, சீனாவுக்கும் பல்வேறு நாடுகளுக்கும் இடையில் மானிடப் பரிமாற்றம், பண்பாட்டு ஒருங்கிணைப்பு, நாட்டுப்புறத் தொடர்பு ஆகியவற்றுக்கு ஆக்கப்பூர்வ பங்கு ஆற்றும் என்று தெரிவித்தார்.

2010ஆம் ஆண்டு சீனாவின் பாரம்பரிய 24 சூரிய பருவ நாட்களுக்குரிய குயூ தினத்தை ஐ.நா. சீன மொழித் தினமாக நிர்ணயித்தது என்பது குறிப்பிடத்தக்கது.