திறமையான தொழிலாளர்களுக்கு இலாபகரமான வெளிநாட்டு வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்கு முயற்சிக்கும் இலங்கை!
2023-04-20 11:02:52

திறமையான தொழிலாளர்களுக்கு, பல நாடுகளில் இலாபகரமான வேலை வாய்ப்புகளை, இலங்கை பெற்றுக்கொடுக்க முடிந்துள்ளதாக அமைச்சர் ஒருவர் புதன்கிழமை தெரிவித்தார்.

ஜப்பான் மற்றும் ஐரோப்பாவில் பராமரிப்பாளர் வேலைகள், இங்கிலாந்து, கனடா மற்றும் அஸ்திரேலியாவில் விருந்தோம்பல் துறை வேலைகள் மற்றும் மத்திய கிழக்கில் கட்டுமான துறை வேலைகளை, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் செய்து வருவதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

மார்ச் மாதத்தில் 56 கோடி அமெரிக்க டாலர்களை  புலம்பெயர்ந்த தொழிலாளர்களால் நாட்டிற்கு திருப்பி அனுப்பியதாகவும், மீதமுள்ள 2023 ஆம் ஆண்டின் மாதங்களில்,  50 கோடி டாலர்களுக்கு மேல் பெறுவதற்கு இலங்கை அரசு  திட்டமிட்டுள்ளதாகவும் நாணயக்கார கூறினார்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பணம், இலங்கைக்கான வெளிநாட்டு வருமானத்தின் முக்கிய ஆதாரங்களில் ஒன்றாக திகழ்கிறது.