இந்தியாவில் நடைபெறும் எஸ்சிஓ கூட்டத்தில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பங்கேற்கவுள்ளார்
2023-04-21 10:38:45

இந்தியாவின் கோவா நகரில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் குழு கூட்டத்தில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி கலந்து கொள்ளவுள்ளார் என்று பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் வியாழக்கிழமை தெரிவித்தார்.

இக்கூட்டத்திற்கு பாகிஸ்தான் தூதுக்குழுவுக்கு, வெளியுறவு அமைச்சர் தலைமை தங்குவார் என்று வெளியுறவு அலுவலக செய்தி தொடர்பாளர் மும்தாஸ் சஹ்ரா பலோச் தெரிவித்தார்.

எஸ்சிஓ சாசனம் மற்றும் செயல்முறைகள், நாட்டின் வெளியுறவுக் கொள்கை முன்னுரிமைகளில் பிராந்தியத்திற்கு முக்கியத்துவம் அளிப்பது ஆகியவை பற்றி பாகிஸ்தான் வழங்கும் உறுதிப்பாட்டை இது பிரதிபலிக்கிறது என்று அவர் மேலும் கூறினார்.