உலக வளர்ச்சி முன்மொழிவு பற்றிய விளம்பர நடவடிக்கை
2023-04-21 10:32:55

உலக வளர்ச்சி பற்றிய முன்மொழிவு தொடர்பாக புதிய முன்னேற்றங்களும் தொடரவல்ல வளர்ச்சியும் என்ற கருத்து அடிப்படையிலான விளம்பர நடவடிக்கை நியூயார்க்கில் அமைந்துள்ள ஐ.நா. தலைமையகத்தில் 19ஆம் நாள் நடைபெற்றது.

இதில், சீனத் தேசிய சர்வதேச வளர்ச்சி ஒத்துழைப்பு ஆணையத்தின் தலைவர் லுயோ ஜாஹுய் உரை நிகழ்த்தினார். அப்போது, சீனா முன்வைத்த மனித குலத்துக்கான பொது எதிர்காலம், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கூட்டுக் கட்டுமானம், உலக வளர்ச்சி முன்மொழிவு முதலிய முக்கிய கருத்துக்கள், உலக வளர்ச்சி இலட்சியத்தை வளர்ப்பதற்கு முக்கியப் பங்காற்றியுள்ளன என்று அவர் கூறினார். உலக வளர்ச்சி முன்மொழிவையும் தொடரவல்ல வளர்ச்சி இலக்கையும் பல்வேறு நாடுகள் கூட்டாக நடைமுறைப்படுத்தினால், ஒத்த கருத்துக்களை வலுப்படுத்தி, ஒத்துழைப்பை ஒன்றிணைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.