ஐ.நாவின் சீன மொழி தினம் மற்றும் 3வது பன்னாட்டுக் காணொளி விழா
2023-04-21 10:50:30


ஐ.நாவின் சீன மொழி தினம் மற்றும் 3வது சீன ஊடகக் குழுமத்தின் வெளிநாட்டுக் காணொளி விழா ஏப்ரல் 20ம் நாள் ஜெனீவாவிலுள்ள ஐ.நா அலுவலகத்தில் நடைபெற்றது. இவ்வாண்டு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவை முன்வைத்த 10வது ஆண்டு நிறைவாகும். அதனால் நடப்பு விழாவில் “பாதை”என்ற தலைப்பில், பிரான்ஸ், அமெரிக்கா, ஜெர்மனி முதலிய 37 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 939 காணொளி படைப்புகள் பெறப்பட்டன.

ஜெனீவாவிலுள்ள ஐ.நா அலுவலகப் பொது இயக்குநர் டாடியானா அம்மையார் உரைநிகழ்த்துகையில், சீன மொழி, ஆழ்ந்த சீனப் பண்பாட்டின் சின்னமாகும். அது, சீன மக்களின் உறுதியான பண்பை வெளிக்காட்டுகிறது என்று தெரிவித்தார்.

ஜெனீவாவிலுள்ள ஐ.நாவுக்கான சீன நிரந்தரப் பிரதிநிதி ச்சேன் ஷூயு கூறுகையில், வேறுபாட்டுடன் நல்லிணக்கம் உள்ளிட்ட சிந்தனை, தலைமுறை தலைமுறையான சீன மக்களின் அடிப்படை கருத்தாகும் என்று குறிப்பிட்டார்.