உலக வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளை வழங்கும் சீன நவீனமயமாக்கம்
2023-04-21 15:25:30

சீன நவீனமயமாக்கமும் உலகமும் என்னும் நீல மன்றக்கூட்டத்தின் துவக்க விழாவில் சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான ச்சிங்காங் ஏப்ரல் 21ஆம் நாள் பங்கெடுத்தார்.

அவர் கூறுகையில், உலகத்தில் மிகப் பெரிய வளரும் நாடான சீனா, நவீனமயமாக்கத்தை நனவாக்குவது, தனது சொந்த வளர்ச்சியை முன்னேற்றும் அதேவேளையில், உலக அமைதிக்கு மேலதிக ஆக்கப்பூர்வமான ஆற்றலையும், உலக வளர்ச்சிக்கு மேலதிக புதிய வாய்ப்புகளையும் வழங்கும் என்றார்.