சீனக் கப்பல் தொழில் துறையின் வளர்ச்சி
2023-04-21 14:20:02

இவ்வாண்டின் முதல் காலாண்டில் சீனக் கப்பல் தொழிற்துறை நிதானமாக மீட்சி அடைந்தது. இதனால், பல குறியீடுகள் உலகின் முதலிடத்தில் இருப்பதோடு, கப்பல் தொழிற்துறையின் உயர் தர மற்றும் தூய்மையான வளர்ச்சியும் புதிய முன்னேற்றமடைந்துள்ளது.

புள்ளிவிவரங்களின் படி, முதல் காலாண்டில் சீனா தயாரித்த கப்பல்களால் ஏற்றிச் செல்லக்கூடிய சரக்குகளின் மொத்த எடை 91 இலட்சத்து 70 ஆயிரம் டன்னாகும். நடப்பாண்டில் மொத்தமாக 1 கோடியே 51 இலட்சத்து 80 ஆயிரம் டன்களை ஏற்றிச் செல்லக்கூடிய கப்பல்களின் புதிய பதிவுகளை சீனா ஏற்றுக்கொண்டுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 53 விழுக்காடு அதிகம். 2022ஆம் ஆண்டில் உலகின் 18 முக்கிய வகை கப்பல்களில் 12 வகை கப்பல்களின் புதிய பதிவுடன் சீனா உலகளவில் முதலிடம் வகிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.