சீன-இலங்கை தெற்காசிய சரக்குப் போக்குவரத்து மையத்தின் கட்டுமானம்
2023-04-22 17:41:12

தெற்காசிய வணிக மற்றும் சரக்குப் போக்குவரத்து மையத்தின் கட்டுமான உடன்படிக்கையில், சீன வணிகர் பணியகத்தின் துறைமுக நிறுவனம், இலங்கை துறைமுக நிர்வாகம், உள்ளூர் தொழில் நிறுவனம் ஒன்று ஆகியவை கூட்டாகக் கையொப்பமிட்டன. இந்நிறுவனங்கள் ஒன்றிணைந்து தெற்காசிய பிராந்திய பன்னோக்குத் திறனுடைய நவீன சரக்குப் போக்குவரத்து மையம் ஒன்றை கட்டியமைக்கும்.

39.2 கோடி அமெரிக்க டாலர் முதலீட்டில் உருவாக்கப்படும் இம்மையம் கொழும்பு துறைமுகத்தில் அமையவுள்ளது. இது, கட்டுமானம், நிர்வாகம், ஒப்படைப்பு என்ற வழிமுறையில் கட்டியமைக்கப்படும் முதலாவது சரக்கு போக்குவரத்து மையம் ஆகும். இந்த மூன்று நிறுவனங்களும் இணைந்து இலங்கையில் புதிய நிறுவனம் ஒன்றையும் பதிவு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.