சீனாவில் இயற்கைச் சூழல் பாதுகாப்புக் கோடு வரையும் பணி நிறைவு
2023-04-22 18:38:27

இவ்வாண்டின் ஏப்ரல் 22ஆம் நாள் 54ஆவது உலக பூமி தினமாகும். இதை ஒட்டி சீன இயற்கை வளங்கள் அமைச்சகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முழு சீனாவிலும் இயற்கைச் சூழல் பாதுகாப்புக் கோடு வரையும் பணி நிறைவேற்றப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பாதுகாப்புக் கோடுகள், சிங்காய்-திபெத் பீடபூமி இயற்கை மண்டலம், மஞ்சள் ஆறு மற்றும் யாங்சி ஆறு முக்கிய இயற்கை மண்டலங்கள், வட கிழக்கிலுள்ள காடுகள் பகுதி, வடக்கிலுள்ள மணல் தடுப்பு பகுதி உள்ளிட்டவற்றில் முக்கியமாக அமைந்துள்ளன. இவற்றில், பெரும்பாலான புல்வெளி, சதுப்புநிலம், பவளப் பாறை, அலையாத்தி காடு போன்ற முக்கிய இயற்கை மண்டலங்களும், பயன்படுத்தப்படாத மற்றும் குடிமக்கள் இல்லாத கடல் தீவுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மேலும், இயற்கைக்கு மதிப்பளிக்கும் கோட்பாட்டை பின்பற்றி வரும் சீனா, 27 மாநிலங்களில் இயற்கை பாதுகாப்புக்கான மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு, பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.