ஏசோ நகரத்திலிருந்து டெல்லி நகருக்குச் செல்லும் விமானச் சேவை துவக்கம்
2023-04-22 17:56:01

சீனாவின் ஹுபெய் மாநிலத்தின் ஏசோ நகரத்திலிருந்து இந்தியாவின் டெல்லி நகருக்குச் செல்லும் விமானச் சேவையை, சீனாவின் முதலாவது சரக்குப் போக்குவரத்து விமான நிலையமான ஏசோ ஹுவாஹு விமான நிலையம் ஏப்ரல் 21ஆம் நாள் அதிகாரப்பூர்வமாகத் துவக்கியது. 47 டன் எடையுடைய சரக்குகளைக் கொண்டுச் சென்ற விமானம் ஒன்று அன்று புறப்பட்டது.

திட்டப்படி இந்த விமானச் சேவை வாரந்தோறும் 3 முறை வழங்கப்படும். இச்சேவையின் மூலம் மின்னணுப் பொருட்கள், பொதுவான சரக்குகள், விரைவஞ்சல் பொருட்கள் முதலியவை சீனாவிலிருந்து இந்தியாவுக்கு அனுப்பப்படும். மேலும், வாரந்தோறும் சீனா-இந்தியா இடையேயான சரக்கு போக்குவரத்தில் 300 டன்னுக்கு மேலான சரக்குகளை அனுப்ப முடியும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.