13ஆவது பெய்ஜிங் சர்வதேசத் திரைப்பட விழா துவக்கம்
2023-04-22 16:22:22

13ஆவது பெய்ஜிங் சர்வதேசத் திரைப்பட விழா ஏப்ரல் 22ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறைத் துணைத் தலைவரும், சீன ஊடகக் குழுமத்தின் இயக்குநரும், நடப்புத் திரைப்பட விழாவின் அமைப்புக் குழுத் தலைவருமான ஷென் ஹாய்சியொங் துவக்க விழாவில் உரை நிகழ்த்தினார்.

அவர் கூறுகையில், அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தின் உயர்வேக முன்னேற்றத்துடன், திரைப்படத் துறை பெரும் வாய்ப்பு மற்றும் சவாலைச் சந்தித்து வருகிறது. தற்போது சீன ஊடகக் குழுமம் செல்வாக்கு மிக்க 5 திரைப்பட விழாக்களை ஏற்பாட்டுச் செய்து, புதிய யுகத்தில் சீனத் திரைப்படத் துறையின் வளர்ச்சிக்கு ஆதரவளித்து வருகிறது என்றார்.

மேலும், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற முன்மொழிவின் 10ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, பட்டுப்பாதை நாடுகளின் புதிய திரைப்படங்கள் நடப்பு விழாவில் சிறப்பாகத் திரையிடப்பட உள்ளன.