சிங்கப்பூரின் 2 செயற்கைக் கோள்கள் ஏவுப் பணியில் இஸ்ரோ வெற்றி
2023-04-23 18:51:49

இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பு ஏப்ரல் 22ஆம் நாள் சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து 757 டன் எடையுடைய 2 செயற்கைக் கோள்களுடன் கூடிய பி.எஸ்.எல்.வி. – சி 55 ஏவூர்தியை விண்ணில் வெற்றிகரமாகச் செலுத்தியது.

பி.எஸ்.எல்.வி. – சி 55 ஏவூர்தி கடமை, சிங்கப்பூரின் சர்வதேச செயற்கைக் கோள் வாடிக்கையாளருக்கு நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனத்தால் வழங்கப்பட்ட சிறப்பு வணிக நோக்கிற்கான கடமையாகும். நடப்பு கடமையில் ஏவப்பட்ட 2 செயற்கைக் கோள்களில் ஒன்று, சிங்கப்பூர் அரசுக்கு செயற்கைக் கோள் படங்களை வழங்கும். மற்றொன்று, சிங்கப்பூரின் கடல் பாதுகாப்புக்கான மின்னணு வழிக்காட்டலை வலுப்படுத்துவதோடு, உலகக் கப்பல் போக்குவரத்து துறைக்கும் நன்மை புரியும்.