மே தின விடுமுறையில் சீனாவின் விமானப் பயணங்கள்
2023-04-23 18:52:15

தொடங்க உள்ள மே தின விடுமுறையில் சீனாவின் பயணியர் விமானப் பயணங்கள் சுமார் 90 லட்சத்தை எட்டும் என்று சீன பயணியர் விமான நிர்வாகம் அண்மையில் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை விமானச் சீட்டுகளுக்கான முன்பதிவுகள் எண்ணிக்கை 60 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இது, விமானப் பயணச் சந்தை, 2019ஆம் ஆண்டின் இதேகாலத்தில் இருந்த அளவுக்கு மீட்சியுள்ளதை காட்டுகிறது.

பயணிகளின் பயணத் தேவையை நிறைவு செய்யும் வகையில், இக்காலக்கட்டத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானச் சேவை நிறுவனங்கள் 3500 சர்வதேச விமானப் பயணச் சேவைகளை வழங்க உள்ளன. இது, 2019ஆம் ஆண்டின் இதேகாலத்தில் இருந்ததன் 30 விழுக்காடாகும்.

இதனிடையே 65 ஆயிரம் உள்நாட்டு விமானப் பயணச் சேவைகளில் 1 கோடியே 20 லட்சத்துக்கும் மேலான இருக்கைகள் வழங்கப்படும். இந்தப் போக்குவரத்து திறன் 2019ஆம் ஆண்டின் இதேகாலத்தை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.