2வது தேசிய புத்தக வாசிப்பு மாநாடு துவக்கம்
2023-04-23 16:49:41

ஏப்ரல் 23ஆம் நாள், உலகப் புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினமாகும். இந்நாளை முன்னிட்டு 2ஆவது தேசிய புத்தக வாசிப்பு மாநாடு சேஜியாங் மாநிலத்தின் ஹாங்சோவில் தொடங்கியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறைத் தலைவர் லீ ஷுலெய் துவக்க விழாவில் பங்கெடுத்து உரை நிகழ்த்தினார்.

அவர் கூறுகையில், வலிமைமிக்க நாட்டுக் கட்டுமானம் மற்றும் சீனத் தேசத்தின் மறுமலர்ச்சியை முன்னேற்றுவதற்கு, புத்தக வாசிப்பு தேவைப்படுகிறது என்று சுட்டிக்காட்டினார். மேலும், புத்தக வாசிப்பு, மிக அடிப்படையான பண்பாட்டுக் கட்டுமானமாக வைக்கப்பட வேண்டும் என்றும், வெளியீடுகளின் தரத்தை உயர்த்தி, நகர மற்றும் கிராமப்புறத்தில் அனைவரையும் உள்ளடக்கிய புத்தக வாசிப்பு முன்னேற்ற சேவை அமைப்புமுறையின் உருவாக்கத்தை விரைவுப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

3 நாட்கள் நீடிக்கும் இம்மாநாட்டில், கருத்தரங்குகள், கண்காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.