பசிபிக் கடலில் அணுக் கழிவு நீரை வெளியேற்ற கூடாது
2023-04-23 18:46:03

ஏப்ரல் 22ஆம் நாள் உலக பூமி தினமாகவும் உலக சட்ட தினமாகவும் திகழ்கின்றது. இந்நாளை முன்னிட்டு ஃபுகுஷிமாகென் அணு மின் நிலையத்தின் கழிவு நீரைக் கடலில் வெளியேற்றத் திட்டமிட்டுள்ள ஜப்பான் அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், உலகில் பல தனியார் குழுக்களும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகளும் நடவடிக்கைகளை மேற்கொண்டன.

ஆனால், சர்வதேச சமூகத்தின் எதிர்ப்பைச் சந்தித்த போதிலும் ஜப்பான் அரசு, இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும். கழிவு நீரைச் சமாளிக்கும் சரியான வழிமுறையைத் தேடுவதில் கவனம் செலுத்தாத ஜப்பான் அரசு, தனது திட்டத்தின் பெரிய பாதிப்பை மூடிமறைக்க  முயற்சி செய்கின்றது.

உலகளவில், அணுக் கழிவு நீரை கடலில் வெளியேற்றிய சம்பவம் இதற்கு முன் நிகழ்ந்ததில்லை. இந்த அணுக் கழிவு நீர் கடலில் வெளியேற்றப்பட்டால், கடல் சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்பட்டு மனிதரின் ஆரோக்கியத்திற்கும் இயற்கை சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்கும் என்று பல ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

அணுக்கழிவு நீரை வெளியேற்றும் பிரச்சினையை, ஜப்பான் நேர்மையான அறிவியல் கோணத்திலிருந்து சிந்தித்து  பாதுகாப்பான வழிமுறையில் சமாளிக்க வேண்டும். தொடர்புடைய தரப்புகள், இத்திட்டத்தை ஏற்றுக்கொள்ளும் முன், ஜப்பான் தங்கள் விருப்பத்திற்குச் செயல்படக் கூடாது.