சீனாவில் மேம்பட்டு வரும் இயற்கைச் சூழல் தரம்
2023-04-24 19:55:10

14ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவையின் நிரந்தரக் கமிட்டியின் 2ஆவது கூட்டத்தில், 2022ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் நிலைமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இலக்குகளின் நிறைவேற்ற நிலைமை பற்றிய சீன அரசவையின் அறிக்கை 24ஆம் நாள் கேட்டறியப்பட்டு பரிசீலனை செய்யப்பட்டது. இந்த அறிக்கையின்படி, கடந்த ஆண்டில் முழு சீனாவிலும் இயற்கைச் சூழல் தரம் தொடர்ந்து மேம்பட்டு வருவதோடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிலைமையும் பொதுவாக நிலையாக இருந்தது. இருப்பினும், சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணி இன்னும் கடினமாக உள்ளது.

2023ஆம் ஆண்டில் இயற்கைச் சூழல் பாதுகாப்புக்கான மத்திய கண்காணிப்பை சீனா தொடர்ந்து ஆழ்ந்த முறையில் முன்னேற்றுவதோடு, சுற்றுச்சூழல் வளங்களைச் சீர்குலைக்கும் குற்றச் செயல்களையும் ஒடுக்கும் என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.