ரஷிய வெளியுறவு அமைச்சர் மற்றும் ஐ.நா தலைமைச் செயலாளரின் சந்திப்பு
2023-04-24 10:18:59

டாஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியின் படி, ரஷிய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ் நியூயார்க்கிற்குப் புறப்பட்டு, ஏப்ரல் 24 மற்றும் 25 ஆகிய நாட்களில் நடைபெறும் ஐ.நா. பாதுகாப்பு அவையின் கூட்டத்தில் கலந்து கொள்கின்றார். அதோடு, ஏப்ரல் 24ஆம் நாள் அவர், ஐ.நா தலைமைச் செயலாளர் ஆன்டோனியோ குட்ரெஸை லாவ்ரோவ் சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சந்திப்பின் போது கருங்கடல் துறைமுகத்தின் வேளாண் பொருட்கள் போக்குவரத்து ஒப்பந்தத்தின் எதிர்காலம் உள்ளிட்ட விஷயங்கள் பற்றிக் கலந்தாய்வு நடத்தப்படும் என்று ஐ.நா.வுக்கான ரஷிய நிரந்தரப் பிரதிநிதி வாசிலி நெபென்சியா முன்பு தெரிவித்தார்.

ஐ.நா. பாதுகாப்பு அவையில் ரஷியா தலைமை தாங்கிய இக்கூட்டத்தில் கலந்து கொள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் உள்ளிட்ட பன்னாட்டு தூதாண்மை அதிகாரிகளை லாவ்ரோவ் அழைத்துள்ளதாகத் தெரிய வருகின்றது.