உலகின் மிக உயரமான சிகரத்தில் ஏறுபவர்களின் எண்ணிக்கை புதிய பதிவு
2023-04-24 11:17:34

இவ்வாண்டின் வசந்த கால மலையேறும் பருவத்தில், நேபாளப் பகுதியிலிருந்து ஜொல்மோ லுங்மா சிகரத்தில் ஏறுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை வரலாற்றில் மிக அதிக அளவில் பதிவானது என்று நேபாள அதிகாரி ஒருவர் ஞாயிற்றுகிழமை தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை வரை, நேபாளச் சுற்றுலாப் பணியகம், 61 நாடுகளைச் சேர்ந்த 454 மலை ஏறுபவர்களுக்குஅனுமதி வழங்கியுள்ளது. இவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தவிரவும், 96பேர் சீனாவையும், 87பேர் அமெரிக்காவையும், 40பேர் இந்தியாவையும் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.