சீனாவின் முதலாவது முழு செவ்வாய் கிரகப் பட வரைப்படம் வெளியானது
2023-04-24 14:26:38

சீனாவின் முதலாவது செவ்வாய் கிரக ஆய்வு விண்கலம் மூலம் கிடைத்த முழு செவ்வாய் கிரகத்தின் வரைப்படத்தை சீனத் தேசிய விண்வெளிப் பணியகமும் சீன அறிவியல் கழகமும் ஏப்ரல் 24ஆம் நாள் கூட்டாக வெளியிட்டன.

2021ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2022ஆம் ஆண்டு ஜுலை திங்கள் வரையிலான 8 மாதங்களில், தியன் வென்-1எனும் செவ்வாய் கிரக ஆய்வுக்கலம், தொலை உணர்வு தொழில் நுட்பத்தில், செவ்வாய் கிரகத்தின் முழு வெளிப்புறப் பகுதியை 284 முறைக படம் எடுத்தது.

தரையிலுள்ள பயன்பாட்டு அமைப்பு 14757 படத் தரவுகளின் அடிப்படையில், முழு செவ்வாய் கிரகத்தின் வரைப்படத்தை உருவாக்கி வெளியிட்டது.