வங்காளதேசத்தின் புதிய அரசுத் தலைவருக்கு ஷி ச்சின்பிங்கின் வாழ்த்துகள்
2023-04-24 17:16:40

வங்காளதேச அரசுத் தலைவராக பதவி ஏற்ற முகமது ஷஹாபுதீன் சுப்புக்கு சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் 24ஆம் நாள் வாழ்த்துகள் தெரிவித்தார்.

சீனாவும் வங்காளதேசமும் பாரம்பரிய நட்புறவு அண்டை நாடுகளாகும். இரு நாட்டுறவில் உயர்வாக கவனம் செலுத்தி வரும் நான், சுப்புவுடன் இணைந்து, இரு நாடுகளின் பாரம்பரிய நட்புறவைத் தொடர்ந்து முன்னேற்றி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் உயர்தர கட்டுமானத்தில் கூட்டாக செயல்பட்டு இரு நாட்டு நெடுநோக்கு ஒத்துழைப்பு கூட்டுறவின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல விரும்புகின்றேன் என்று ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.