ரஷியா, பிரான்சுக்கு சீனாவின் விண்வெளி அன்பளிப்பு
2023-04-24 18:25:09

2023ஆம் ஆண்டு சீனாவின் விண்வெளி தின நிகழ்ச்சியின் துவக்க விழாவில், ரஷியா, பிரான்சு ஆகிய நாடுகளுக்கு சீனா சந்திர மாதிரி பொருட்களை அன்பளிப்பாக வழங்கியது தொடர்பான தகவலை சீனத் தேசிய விண்வெளி நிர்வாகம் வெளியிட்டது.

இவ்வாண்டின் ஏப்ரலில் பிரான்சு அரசுத் தலைவர் மக்ரோன் சீனப் பயணம் மேற்றொண்ட போது, அறிவியல் ஆய்வுக்கான 1.5 கிராம் எடையுடைய சந்திர மாதிரியை பிரான்சுக்கு சீனா அன்பளிப்பாக வழங்கியது. இதைப் போல், கடந்த ஆண்டின் பிப்ரவரியில் ரஷிய அரசுத் தலைவர் புதின் சீனப் பயணம் மேற்கொண்ட போது, ரஷியாவுக்கு சீனா 1.5 கிராம் சந்திர மாதிரியை வழங்கியது. இவ்வாண்டின் மார்ச் மாதத்தில் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் ரஷியாவில் பயணம் மேற்கொண்ட போது, ரஷியா சீனாவுக்கு 1.5 கிராம் சந்திர மாதிரியையும் பதில் அன்பளிப்பாக வழங்கியது.

சந்திர மாதிரி பொருட்களின் பகிர்வு மற்றும் கூட்டு ஆய்வு என்பது, சந்திரன் தோற்றம் மற்றும் பரிணாமம் உள்ளிட்டவற்றை ஆராயும் முக்கிய வழிமுறையும், தெரியாத உலகத்தை ஆய்வு செய்வதில் மனிதர்கள் மேற்கொள்ளும் முக்கிய அறிவியல் நடவடிக்கையும் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.