133வது சீன இறக்குமதி மற்றும் ஏற்றுமதி பொருட்காட்சியின் 2வது கட்டம் துவக்கம்
2023-04-24 16:58:09

133வது சீன இறக்குமதி மற்றும் ஏற்றுமதி பொருட்காட்சியின் 2வது கட்டம் ஏப்ரல் 23 முதல் 27ஆம் நாள் வரை குவாங்சோ நகரில் நடைபெறுகின்றது. அன்றாடத் தேவைப் பொருட்கள், அன்பளிப்புப் பொருட்கள், வீட்டு பயன்பாட்டு அலங்காரப் பொருட்கள் முதலியவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. தரவுகளின்படி, இக்கட்டத்தின் முதலாவது தினத்தில் அரங்கில் நுழைந்த மக்கள் எண்ணிக்கை 2 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

கர்ப்பினி மற்றும் குழந்தை பொருட்களுக்கான காட்சி அரங்கு நடப்பு பொருட்காட்சியில் புதிதாக அமைக்கப்பட்ட ஒன்று. இது, பொருட்காட்சியின் தொழில் முறை நிலையை உயர்த்துவதற்கும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுழற்சியை மேம்படுத்துவதற்கும் துணைப் புரியும் என்பது குறிப்பிடத்தக்கது.