சீனத் தொழில் நிறுவனங்களின் ஏற்பாட்டில் “Hope village”என்னும் கிராமப்புற வளர்ச்சித் திட்டப்பணி முடிவு
2023-04-24 17:19:55

சீனத் தொழில் நிறுவனங்களின் ஏற்பாட்டில், இலங்கையின் கெண்டகஸ்மான்கட கிராமத்திலுள்ள “Hope village”என்னும் கிராமப்புற வளர்ச்சித் திட்டப்பணியின் நிறைவு மற்றும் ஒப்படைப்பு நிகழ்ச்சி ஏப்ரல் 23ஆம் நாள் நடைபெற்றது.

இலங்கைக்கான சீனத் தூதர் ச்சி ட்சென்ஹொங், சீன வணிகர்கள் குழுத் தலைவர் மியௌ ஜியான்மின், நூற்றுக்கணக்கான உள்ளூர் கிராமவாசிகள் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கெடுத்தனர். கெண்டகஸ்மான்கட கிராமத்தின் வளர்ச்சிக்கு ஆதரவு மற்றும் உதவியளித்த சீனாவுக்கு இத்திட்டப்பணிக்குப் பொறுப்பான இலங்கை தரப்பினர் ஒருவர் நன்றி தெரிவித்தார். மேலும், உள்ளூர் அடிப்படை வசதிகளை இது மேம்படுத்தும் அதேவேளையில், கிராமவாசிகளின் வாழ்க்கை நிலையையும் உயர்த்தும் என்றும் அவர் கூறினார்.

மியௌ ஜியான்மின் கூறுகையில், எதிர்காலத்தில், இக்கிராமத்தின் சுற்றுப்புற குடியிருப்புப் பகுதிகளுக்கான ஆதரவை, சீன வணிகர்கள் குழு தொடர்ந்து வலுப்படுத்தி, சீனாவின் வறுமை ஒழிப்பு அனுப்பவங்களைப் பகிர்ந்து கொண்டு, உள்ளூர் கிராமவாசிகள் செல்வமடைய உதவும் என்றார்.