சந்திர ஆய்வு நிலையத்தின் கட்டுமானத்தை முன்னேற்றும் சீனா
2023-04-24 17:18:10

 

இவ்வாண்டின் ஏப்ரல் 24ஆம் நாள் சீனாவின் 8ஆவது விண்வெளி தினமாகும். இதையொட்டி, சீனப் பொறியியல் கழகத்தின் மூத்த அறிஞரும் சீன சந்திர ஆய்வுத் திட்டத்தின் தலைமை வடிவமைப்பாளருமான வூ வெய்ரென் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், சந்திரனில் அறிவியல் ஆய்வு நிலையத்தின் கட்டுமானத்தை சீனா முனைப்புடன் முன்னேற்றி வருகிறது. மனிதர்களின் செயல்பாடு மற்றும் வாழ்விடத்தை விரிவாக்கும் விதம், எதிர்காலத்தில், தகவல் தொடர்பு, புவியிடங்காட்டி, தொலை உணர்வறி உள்ளிட்ட செயற்கைக் கோள்களின் அமைப்புமுறை கட்டுமானத்தையும் சீனா மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.

தற்போது, சீனாவின் சந்திர ஆய்வுத் திட்டத்தின் 4ஆவது கட்டம் சீராக நடைபெற்று வருகிறது. இக்கட்டத்தில், சாங்ஏ-6, சாங்ஏ-7, சாங்ஏ-8 ஆகியவற்றின் ஏவுப்பணி அடக்கம். அதோடு, சர்வதேச சந்திர ஆய்வு நிலையத்தின் அடிப்படை மாதிரி உருவாக்கப்படும் என்றும் தெரிய வந்துள்ளது.