2022இல் சீனாவில் நடைபெற்ற பொருளாதார மற்றும் வர்த்தகப் பொருட்காட்சிகள்
2023-04-24 20:00:37

2022ஆம் ஆண்டு சீனாவில் மொத்தம் 1807 பொருளாதார மற்றும் வர்த்தகப் பொருட்காட்சிகள் நடத்தப்பட்டன. இந்த காட்சிகளின் மொத்த பரப்பளவு 5 கோடியே 57 லட்சத்து 60 ஆயிரம் சதுர மீட்டராகும். சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி, சீன ஏற்றுமதி மற்றும் இறக்குமதிப் பொருட்காட்சி, சீனச் சர்வதேச வர்த்தக சேவை பொருட்காட்சி உள்ளிட்ட முக்கியமான பொருட்காட்சிகளின் மூலம், பல்வேறு நாடுகளுக்கு வாய்ப்புகளைப் பகிர்ந்து கொண்டு பரிமாற்றத்தை விரிவாக்கும் சர்வதேச ஒத்துழைப்பு மேடை உருவாக்கப்பட்டுள்ளன என்று சீன வர்த்தக முன்னேற்றச் சங்கம் ஏப்ரல் 24ஆம் நாள் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஆண்டு இச்சங்கத்தின் ஏற்பாட்டில், 12 இணையவழி பொருட்காட்சிகளையும் ஒரு நேரடி பொருட்காட்சியையும் உள்ளடக்கிய 13 பொருட்காட்சிகள் வெளிநாடுகளில் நடத்தப்பட்டன. இவற்றில் ஏற்பட்ட ஆர்வமான பரிவர்த்தனை தொகை 7 கோடி அமெரிக்க டாலருக்கு மேலாகும்.