உண்மையான பலதரப்புவாதத்தைச் செயல்படுத்த வேண்டும்:ட்சாங் ச்சுன்
2023-04-25 16:53:52

ஐ.நா சாசனம் மற்றும் பலதரப்புவாதத்தைப் பாதுகாப்பது பற்றி ஐ.நா பாதுகாப்பவை ஏப்ரல் 24ஆம் நாள் நடத்திய விவாதக் கூட்டத்தில் ஐ.நாவுக்கான சீன நிரந்தரப் பிரதிநிதி ட்சாங் ச்சுன் உரை நிகழ்த்தி, பல்வேறு நாடுகள் உண்மையான பலதரப்புவாதத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

அவர் கூறுகையில், மனித குலம் முன்னென்றும் கண்டிராத சவாலைச் சந்தித்து வருகிறது. பல்வேறு நாடுகள் உண்மையான பலதரப்புவாதத்தைச் செயல்படுத்தி, ஐ.நாவின் கட்டுக்கோப்புக்குள் ஒற்றுமையை வலுப்படுத்தி, உலக மேலாண்மை அமைப்புமுறையின் பயனை உயர்த்தி, பொது பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை நனவாக்கி, பொது எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்றார்.