துப்பாக்கியால் ஏற்படும் நச்சு சுழலில் சிக்கியுள்ள அமெரிக்கா
2023-04-25 17:21:37

தவறுதலாக செயல்பட்டால் அமெரிக்காவில் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. தற்போதைய அமெரிக்கர்கள் அச்ச உணர்வில் சிக்கிக் கொண்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக அந்நாட்டில் குற்றச் செயல்களின் அதிகரிப்புடன் இந்த அச்சம் தொடர்புடையது. குற்ற வழக்குகளுக்கு இனவெறி பாகுபாடு முக்கிய காரணமாகும்.

அமெரிக்க சமூக முரண்பாடு மற்றும் மோதல்கள் கடந்த சில ஆண்டுகளில் தீவிரமாகி வருவதோடு, பொது மக்களின் பாதுகாப்பற்ற உணர்வு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மேலதிக அமெரிக்கர்கள் தற்காப்புக்காக துப்பாக்கிகளை வாங்கியுள்ளனர். அனைவரும் துப்பாக்கிகளைக் கொண்டுள்ள அமெரிக்க சமூகத்தில், பாதுகாபற்ற நிலையில் துப்பாக்கி வாங்குவதால் மேலும் பெரும் பாதுகாப்பற்ற உணர்வு ஏற்படும் நச்சு சுழல் உருவானது தவிர்க்கப்பட முடியாதது.

வாக்குகள் மற்றும் பணம் காரணமாக, துப்பாக்கி கட்டுப்பாடு என்பது, அமெரிக்காவின் இரு கட்சிகள் போட்டியிடுவதற்கான கருவியாகும். துப்பாக்கி சம்பந்தமான வன்முறையானது, அமெரிக்காவில் மிக கடுமையான சமூகப் பிரச்சினையாகும்.

தொலைநோக்குடன் பார்த்தால், அமைப்பு முறை சார் சீர்திருத்தம் இல்லாத நிலையில், அந்நாட்டின் ஆழ்ந்த சமூக முரண்பாடுகள் தீர்க்கப்பட முடியாது. இப்பிரச்சினை துப்பாக்கியால் மேலும் மோசமாகி விடும். மனித உரிமைகளை அழுத்தம்பட தெரிவிக்கும் அமெரிக்காவில், வாய் திறந்து ஒரு சொல் கூறும் முன் சுட்டுக் கொல்லப்பட்டவரின் மனித உரிமை யாரால் பாதுகாக்கப்படும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.