மிகப் பெரிய மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்கும் இந்தியா
2023-04-25 16:48:39

உலக மக்கள் தொகை பற்றிய ஐ.நாவின் மதிப்பீட்டின்படி, உலகத்தில் மிகப் பெரிய மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா ஏப்ரல் திங்களுக்குள் விளங்கும்.

ஐ.நாவின் பொருளாதார மற்றும் சமூக விவகாரத் துறை 24ஆம் நாள் வெளியிட்ட செய்தியில், ஏப்ரல் மாத இறுதியில், இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 142.58 கோடியை எட்டும். அடுத்த பல ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும். மேலும், முதியோர்களின் எண்ணிக்கை விரைவாக அதிகரிக்கும். ஆனால் மொத்த மக்கள் தொகையில் முதியோர் தொகையின் விதிகத்தைப் பார்க்கும் போது, மூப்படைதல் பிரச்சினை கடுமையாக அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.