சீன-இந்திய இராணுவங்களுக்கு இடையே 18ஆவது சுற்று பேச்சுவார்த்தை
2023-04-25 18:46:50

சீனத் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, சீன மற்றும் இந்திய இராணுவங்கள் ஏப்ரல் 23ஆம் நாள் மோல்டோ-ட்சுஷுல் எல்லை சந்திப்பு இடத்தின் சீனப் பகுதியில், 18ஆவது சுற்று பேச்சுவார்த்தையை நடத்தின. இருதரப்பும் நட்பு மற்றும் மனம் திறந்த நிலையில் சில விவகாரங்கள் பற்றி கருத்துகளைப் பரிமாறிக் கொண்டன. இருநாட்டு தலைவர்களின் வழிக்காட்டலுடன், இருநாட்டு வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பின் சாதனைக்கிணங்க, இராணுவம் மற்றும் தூதாண்மை வழிமுறையில் தொடர்பை நிலைநிறுத்தி, சீன-இந்திய எல்லையின் மேற்கு பகுதி தொடர்பான பிரச்சினையை வேகத்துடன் தீர்க்கும் அதேவேளை, எல்லை பகுதியின் அமைதி மற்றும் பாதுகாப்பையும் தொடர்ந்து பேணிக்காப்பதற்கு இருதரப்பும் ஒப்புக் கொண்டுள்ளன.