இயற்கையுடன் இணக்கமான சக வாழ்வில் சீனாவின் அனுபவங்கள்
2023-04-25 17:01:53

ஐ.நாவுக்கான சீனாவின் துணை நிரந்தரப் பிரதிநிதி டாய் பிங் ஏப்ரல் 24ஆம் நாள் இயற்கையுடன் இணக்கமான சக வாழ்வு பற்றிய ஐ.நா. பொது பேரவையின் கூட்டத்தில் சீனாவின் அனுபவங்களை அறிமுகம் செய்தார்.

இயற்கைக்கு மதிப்பளிப்பது, இயற்கையுடன் இசைவாகச் செயல்படுவது, இயற்கையைப் பேணிக்காப்பது ஆகியவற்றில் சீனா நிலைத்து நின்று வருகிறது. வளர்ச்சியில் இயற்கை பாதுகாப்பையும் பாதுகாப்பில் வளர்ச்சியையும் மேற்கொள்ளும் அடிப்படையில், பல்லுயிர் பாதுகாப்பையும் வறுமை நிவாரணம் உள்ளிட்ட நிலையான வளர்ச்சி இலக்குகளையும் ஒருங்கிணைத்து முன்னேற்றுவதை சீனா ஆராய்ந்து வருகிறது. மேலும், ஒன்றிணைந்த பாதுகாப்பு மற்றும் முறைமை சார் கட்டுப்பாட்டைப் பின்பற்றும் சீனா, தொழில் கட்டமைப்பு சீராக்கம், மாசு கட்டுப்பாடு, இயற்கை பாதுகாப்பு, காலநிலை மாற்ற சமாளிப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்து செயல்பட்டு வருகிறது என்று அவர் எடுத்துக் கூறினார்.

தவிரவும், வளரும் நாடுகளுடன் பயனுள்ள அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், காலநிலை மாற்றம் உள்ளிட்ட துறைகளில் பல்வேறு தரப்புகளுடன் தொடர்ந்து ஒத்துழைப்பு மேற்கொள்ளவும் சீனா விரும்புகிறது என்றும் அவர் தெரிவித்தார்.